திருப்பூர், ஜன. 5: திருப்பூர் வளையங்காடு அருகே அனுப்பர்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்த நபரை சோதனை செய்தனர். அவர் குட்கா பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் வளையங்காடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 114.9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
