கடவூர், ஜன.3: கரூர் மாவட்டம் கடவூர் அருகே காமம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து (65). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்திவருகிறார். இந்த பெட்டிக்கடையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டு உள்ள கான்ஸ் புகையிலையை விற்பனை செய்ததாக தெரிகிறது.
தகவலறிந்த பாலவிடுதி போலீசார், விரைந்து சென்று அந்தப் பெட்டிக்கடையில் ஆய்வு செய்தனர். அப்போது மருதமுத்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கான்ஸ் புகையிலையை, தனது பெட்டிக்கடையில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. போலீஸார் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து மருதமுத்துவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
