வேலாயுதம்பாளையம், ஜன. 3: மாயனான சிறுமியை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுகின்றனர்.
கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதில் ஒரு சிறுமி. சம்பவத்தன்று இந்தச் சிறுமி தனது தோழியை பேருந்தில் ஏற்றி விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றவர் வீடு திருபவில்லை.
சிறுமியின் பெற்றோர் அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் சிறுமி தேடினர். ஆனால் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் .புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ், வழக்கு பதிவு செய்தார். சிறுமி எங்காவது சென்று விட்டாரா ? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.
