×

திருச்சியில் நடைபெறும் விழாவில் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்

திருச்சி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் நாளை திருச்சி வருகை தருகிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2ம்தேதி முதல் 12ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணி அளவில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் தொடங்கி வைத்து பேசுகிறார்.

முன்னதாக இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடல் வரை சென்று பொதுமக்களை சந்திக்கிறார். சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகை தொடர்பாக சென்னையில் இருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திருச்சிக்கு வந்து ஆலோசனை நடத்துகிறார்கள். முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags : Trischi ,Vigo ,Equality Walk ,H.E. K. Stalin ,Trichy ,Secretary General ,General ,Wiko Trishi ,Madurai ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான ஒன்றிய...