தேவையானவை:
புடலங்காய் – 1,
கடலைப்பருப்பு – 100 கிராம்,
பச்சை பயிர் – 100,
சோம்பு – 1 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 5,
பூண்டு – 5 பற்கள்,
மல்லித்தழை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
புடலங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பருப்பு வகைகளுடன் உப்பு, மிளகாய் வற்றல், சோம்பு போட்டு மிக்சியில் வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும். அரைத்த பருப்பில் பொடியாக நறுக்கிய வெங்காயம், புடலங்காய், மல்லித்தழை, பெருங்காயம் கலந்து வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
