×

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சிக்கன் ஹெர்பல் கலோசல் கேக்

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ (எலும்பு
இல்லாதது)
ப்ரோக்கோலி – நறுக்கியது 1 கப்
உருளைக் கிழங்கு – நறுக்கியது 1 கப்
முட்டை – 4
பால் – 1 கப்
சீஸ் – 1 கப்
பூண்டு – 10 பல்
ரோஸ்மேரி – ஒரு பிடி
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
சீசனிங் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

சிக்கன், ப்ரோக்கோலி, உருளைக் கிழங்கு மூன்றையும் தனித்தனியாக வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பேனில் (pan) வெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். பிறகு, வேக வைத்த சிக்கன், ப்ரோக்கோலி, உருளைக் கிழங்கு சேர்க்கவும். முட்டையை பாலில் நன்றாக அடித்து ஊற்றவும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பொடியாக நறுக்கிய ரோஸ்மேரி தூவவும். அனலை சிம்மில் வைத்து சீஸ் துருவி சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும். வெந்ததும் சீசனிங் தூவி சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். சுவையான சிக்கன் ஹெர்பல் கேக் தயார்.

 

Tags : Christmas ,
× RELATED புரோட்டின் இட்லி