×

எஸ்.ஐ.ஆர்.பணிகளில் அதிமுகவினர் சரியாக செயல்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி அதிருப்தி!!

சென்னை: கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்; தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என எடப்பாடி அறிவுறுத்தியுள்ளார். கள நிலவரத்தை ஆராய்ந்து வேட்பாளர் பரிந்துரை பட்டியலை தருமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தினார். எஸ்.ஐ.ஆர்.பணிகளில் அதிமுகவினர் சரியாக செயல்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுக்கு அதிமுகவிற்கு சாதகமான இடங்கள் வழங்கப்பட்டால் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கவேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எஸ்.ஐ.ஆர் பணிகளில் அதிமுகவினர் சரியாக வேலை பார்க்கவில்லை, மாவட்ட செயலாளர்கள் அதனை சரியான முறையில் கையாளவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதிருப்தியில் உள்ள கிராம மக்களை சந்தித்து கூட்டணி குறித்து நல்லவிதமான கருத்துக்களை தெரிவிக்க எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். அதிமுகவுக்கு சாதகமான இடங்களை பாஜகவுக்கு வழங்க வாய்ப்புள்ளது. கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்; தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என எடப்பாடி வலியுறுத்தினார்.

Tags : S. I. R. Sadapadi Palanisami ,Chennai ,Eadapadi ,Palanisami ,S. I. R. EDAPPADI PALANISAMI ,
× RELATED திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் படுத்திருந்த சிறுத்தை