×

மாடியில் இருந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி

கோவை, டிச. 31: கோவை ஒண்டிப்புதூர் சிந்து நகரை சேர்ந்தவர் புலியன் (46), கட்டிட தொழிலாளி. இவர், கடந்த 27ம் தேதி சிங்காநல்லூர்- திருச்சி ரோடு தனலட்சுமி நகரில் ஒரு புதிய வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அவர், எதிர்பாராதவிதமாக 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Coimbatore ,Pulian ,Sindhu Nagar ,Ondipudur ,Thanalakshmi Nagar ,Singanallur-Trichy Road ,27th ,
× RELATED கோவை ஹாக்கி வீரர்கள் அரசுக்கு நன்றி