×

கோவை ஹாக்கி வீரர்கள் அரசுக்கு நன்றி

கோவை, டிச. 31: கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்திற்கு ஹாக்கி வீரர், வீராங்கனைகள் சார்பில் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.  இது குறித்து மாணவன் ஹரிஹரன் கூறுகையில், ‘‘நான் பி.இ முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். சொந்த ஊர் விழுப்புரம். கடந்த 6 வருடமாக ஹாக்கி பயிற்சி பெற்று வருகிறேன்.

கிராஸ் மைதானத்தில் பயிற்சி பெற்று திடீரென சென்று டர்ப் ஹாக்கி மைதானத்தில் போட்டிகளில் பங்கேற்கும்போது கடினமாக இருக்கும். இந்நிலையில், கோவையில் டர்ப் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டு இருப்பது தேசிய, மாநில அளவிலான போட்டிகளுக்கு தயாராக உதவியாக இருக்கும். இதற்கு ஹாக்கி வீரர்களின் சார்பில் தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த சுகன்யா கூறுகையில், ‘‘நான் ஹாக்கி இந்தியா படித்து வருகிறேன். தனியார் பள்ளி, கல்லூரிகளில் உள்ள மைதானங்களில் தான் தற்போது விளையாடி வருகிறோம். இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் ஹாக்கி மைதானத்தை ஹாக்கி வீரர்களுக்கு அரசு அளித்த பரிசாக கருதுகிறேன்.

கோவையில் சிறந்த ஹாக்கி வீரர், வீராங்கனைகள் பலர் உருவாகி வரும் நிலையில், இந்த மைதானம் அடுத்த தலைமுறைக்கு அதிகளவில் பயன் அளிக்கும் வகையில் இருக்கிறது. டர்ப் மைதானத்தில் பயிற்சி செய்வது என்பது போட்டிகளில் வெற்றி பெற உதவும். அரசின் செயலுக்கு அனைத்து வீரர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

 

Tags : Coimbatore ,Coimbatore R.S. Puram ,Hariharan ,B.E. ,
× RELATED சூலூரில் இன்று புதிய வணிக வளாகத்தை துணை முதல்வர் திறந்து வைக்கிறார்