×

ககன் தீப் சிங் பேடி குழு அறிக்கை தாக்கல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஜன.6க்குள் அமல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ககன் தீப் சிங் பேடி குழு 11 மாதங்களுக்கு பிறகு இன்று (நேற்று) அதன் அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்திருக்கிறது. வரும் ஜனவரி 6ம்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்திருப்பதால், இப்போது திடீரென ககன் தீப் குழுவின் அறிக்கையை அரசு பெற்றிருக்கிறது. அரசு ஊழியர் அமைப்புகள் ஜனவரி 6ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமையும் போது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாத அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பாமக நிறைவேற்றும் என உறுதியளிக்கிறேன்.

Tags : Gagan Deep Singh Bedi Committee ,Anbumani ,Chennai ,PMK ,
× RELATED சென்னை பல்கலை துணைவேந்தர் மசோதா...