×

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலை, எலியாட் கடற்கரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘மெரினா கடற்கரை உட்புற சாலை டிச.31 இரவு 9 மணி முதல் ஜன.1 காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். மெரினா கடற்கரை உட்புற சாலையில் டிச.31ம் தேதி இரவு 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,New Year's Eve ,Kamarajar Salai ,Eliot Beach ,Marina Beach Inner Road ,
× RELATED மெட்ரோ ரயில் திட்டம்: மேலகிரி என...