×

குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜன.2 வரை அவகாசம்!

சென்னை: குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜனவரி 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 766 விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக் கட்டணம் செலுத்தாததால் ஜனவரி 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 113 மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்யவும் அவகாசம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தேர்வுக் கட்டணம், உரிய சான்றிதழை பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 11/2025, நாள் 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு 28.09.2025 மு.ப. தேதியில் நடைபெற்றது. இதற்கான முதன்மை தேர்வு 08.02.2026 மு.ப தொகுதி IIA பணிகள் 08.022026 பி.ப தமிழ் தகுதி தேர்வு மற்றும் 22.02.2026 மு.ப தொகுதி II பணிகளுக்கான தேர்வும் நடைப்பெற உள்ளது.

ஆனால், இதுவரை 766 விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வு கட்டணம் செலுத்தவில்லை மற்றும் 113 மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தங்கள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழை பதிவேற்றம் செய்யவில்லை. எனவே, அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, OTR காலம் 30:122025, 12.00 மு.ப முதல் 02.012026, 1159 பி.ப வரை (அதாவது 4 நாட்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள். முதன்மை தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், தேர்வர்கள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழை தேர்வாணையத்தின் இணையதளமான http://www.tnpsc.gov.in- ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் காலவரம்பு நீட்டிக்கப்படமாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்.எல்.ஏ....