×

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் ககன்தீப் சிங் பேடி

 

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையினை குழுவின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. ககன்தீப் சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கடந்த பிப்ரவரியில் தமிழ்நாடு அரசு அமைத்தது. 3 ஓய்வூதிய திட்டம் குறித்து குழு விரிவாக ஆராய்ந்து இறுதி அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. ககன்தீப் சிங் தலைமையிலான குழு கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை சமர்பித்திருந்தது.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.

எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டி தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்தது. இந்நிலையில், கடந்த ஜன.24-ம் தேதி மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது,

எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதி நிலை, பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்த பரிந்துரையை அரசுக்கு அளிக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஊரகவளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் மற்றும் நிதித்துறை துணை செயலர் பிரத்திக் தாயள் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதில் பிரத்திக் தாயள் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை சமர்பித்திருந்தது. தற்போது ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த அறிக்கையினை குழுவின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

 

 

 

Tags : GAGANDEEP SINGH BEDI ,TAMIL NADU ,Chennai ,Committee ,Chief Secretary of Government ,Rural Development ,and Rural Development and Rural Development ,Chief Minister ,Singh Bedi ,Tamil ,Nadu ,K. ,Stalin ,
× RELATED உத்தரகாண்ட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி