×

மும்பை பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை சிறிது சரிந்து முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்து 84,675 புள்ளிகளானது. எட்டர்னல் பங்கு 2%, இண்டிகோ, இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் தலா 1% விலை குறைந்தன. அல்ட்ரா டெக் சிமென்ட், ஐ.டி.சி., டைட்டன், டிரென்ட், டைட்டன் உள்ளிட்ட பங்குகளும் விலை குறைந்தன. டாடா ஸ்டீல், எம்&எம், பஜாஜ் ஃபின்செர்வ், ஆக்சிஸ் வங்கி, எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்தன.

Tags : Mumbai Stock Exchange ,MUMBAI ,Bombay Stock Exchange ,Sensex ,INDIGO ,INFOSYS ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை...