×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800-க்கு விற்பனை: நகை பிரியர்கள் மகிழ்ச்சி

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.420 குறைந்து ரூ.12,600-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.258-க்கும் விற்பனையாகிறது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேற்றைய தினம் கிராமுக்கு ரூ.80 குறைந்து கிராம் ரூ.13,020-க்கும், சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ.1,04,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக அதிரடியாக சவரனுக்கு ரூ.3,360 குறைந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து கிராம் ரூ.12,600-க்கும், சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.458 குறைந்து ரூ.13,745-க்கும், சவரனுக்கு ரூ.3,664 குறைந்து ரூ.109,960-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் மொத்தமாக குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை 8 முறை அதிகரித்தும் 2 முறையும் குறைந்தும் காணப்பட்டது. இதில், 8 நாட்களில் சவரனுக்கு ரூ.5,600 அதிகரித்த நிலையில், கடந்த 2 நாளில் சவரனுக்கு ரூ.4000 குறைந்து இன்று ரூ.1,00,800-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நேற்று வரலாற்று உச்சமாக கிராம் ரூ.281க்கும், 1 கிலோ ரூ.2,81,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போன்று நாளுக்கு நாள் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.23 குறைந்து ரூ.258-க்கும், 1 கிலோ ரூ.2,58,000-க்கும் விற்பனையாகிறது.

Tags : Chennai ,
× RELATED மளமளவென சரிந்த தங்கம், வெள்ளி விலை:...