×

சென்னையில் 128 எண்ணிக்கையிலான மின்விளக்கு கம்பங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு எண்: 55, 56, மற்றும் 57 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பிரகாசம் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்ட 128 எண்ணிக்கையிலான மின்விளக்கு கம்பங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம், வார்டு – 55க்குட்பட்ட தாதா முத்தையப்பன் தெரு முதல் அம்மன் கோயில் தெரு வரை சாலையின் இருபுறமும் ரூபாய் 28.15 இலட்சம் மதிப்பீட்டில் 33 எண்ணிக்கையிலான மின் விளக்கு கம்பங்கள், வார்டு – 56க்குட்பட்ட அம்மன் கோயில் தெரு முதல் இப்ரஹிம் சாலை வரை சாலையின் இருபுறமும் ரூபாய் 59.50 இலட்சம் மதிப்பீட்டில் 58 எண்ணிக்கையிலான மின் விளக்கு கம்பங்கள் மற்றும் வார்டு – 57க்குட்பட்ட என்.எஸ்.சி.போஸ் சாலை முதல் தாதா முத்தையப்பன் தெரு வரை சாலையின் இருபுறமும் ரூபாய் 38.21 இலட்சம் மதிப்பீட்டில் 37 எண்ணிக்கையிலான மின் விளக்கு கம்பங்கள் என 3 வார்டுகளுக்குட்பட்ட பிரகாசம் சாலையின் இருபுறமும் ரூபாய் 1.26 கோடி மதிப்பீட்டில் 128 எண்ணிக்கையிலான மின்விளக்குக் கம்பங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை ஆணையர்கள் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, (வடக்கு வட்டாரம்) கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர் பி.ஶ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் எல்.தாஹா நவீன், வெ.பரிமளம், ராஜேஷ் ஜெயின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,Deputy ,Chief Minister ,Prakasam Road ,Ward Nos. ,Greater Chennai Corporation ,Royapuram Zone… ,
× RELATED கோயில்களில் முதல் மரியாதை என்பது...