கீவ்: உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர்நிறுத்தம் தொடர்பாக 20 அம்ச கோரிக்கையை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச உள்ளார் இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் கீவில் டினிப்ரோ மாவட்டத்தில் 18மாடி குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டுள்ளது.
டார்னிட்சியா மாவட்டத்தில் 24மாடி குடியிருப்பு கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ஒபோலான்ஸ்கி மற்றும் ஹோலோசிவிஸ்கிமாவட்டங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . 40 ஏவுகணைகள் மற்றும் 500 டிரோன்கள் மூலமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயமடைந்தனர். நேற்று அதிகாலை தொடங்கி பல மணி நேரம் இந்த தாக்குதல் நீடித்ததாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
