கொழும்பு: இலங்கை தமிழ் அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தா. முன்னாள் தமிழ் போராளியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) தலைவருமான தேவானந்தா, 1994 முதல் 2024 வரை பல அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். அவருக்கு பாதுகாப்பாக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று ஒரு பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவரிடம் கண்டெடுக்கப்பட்டது.
அந்தக் குற்றவாளி 2020ஆம் ஆண்டு துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். பின்னர்அவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நேற்று டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார். இவர் 1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், 1996ஆம் ஆண்டு சென்னை நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
