சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மதியம் என ஒரு நாளைக்கு 2 முறை மாறுதல் அடைந்து வருகிறது. இதற்கு சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றமே காரணமாக உள்ளது.
அந்த வகையில், வரலாறு காணாத வகையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்துக்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல், இன்று வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.274க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கடந்த 11 நாட்களில் கிலோவுக்கு ரூ.52 ஆயிரம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் ரூ.800 உயர்ந்தது. சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,100க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ஒரே நாளில் ரூ.26,000 உயர்ந்து ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 ஏறிய நிலையில், மாலையில் ரூ.6 அதிகரித்துள்ளது.
