×

புழல் சிறையில் வாகனங்கள் ஏலம்

புழல், டிச.27: புழல் சிறையில் பயன்படுத்த இயலாமல் கண்டம் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நளை மறுநாள் ஏலம் விடப்படுகிறது. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் பயன்படுத்த இயலாமல் கண்டம் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனம் ஆகிய 2 வாகனங்கள் 29ம் தேதி காலை 10 மணியளவில் புழல் மத்திய தண்டனை சிறையில் பொது ஏலம் நடத்தப்பட்ட உள்ளது.
ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் ரூபாய் 500 செலுத்தி, பெயர்களை பதிவு செய்து கொள்ளவும். தொகை செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் முடிந்தவுடன் எடுக்காதவர்களின் தொகை திருப்பி கொடுக்கப்படும். ஏலம் எடுத்தவர் வாகனத்தை சொந்த செலவில் சிறைச்சாலையில் இருந்து எடுத்துச்செல்ல வேண்டும். ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் வாகனங்களை புழல் மத்திய தண்டனை சிறை அலுவலக நாட்களில் காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை சிறை கண்காணிப்பாளரின் முன் அனுமதி பெற்று, துணை சிறை ஜெய்லர் மற்றும் சிறை அலுவலர் முன்பு பார்வையிட்டு செல்லலாம். இவ்வாறு சிறைத்துறை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Puzhal prison ,Puzhal ,Director of ,Tamil Nadu Prisons and Correctional Services Department… ,
× RELATED காசிமேடு கடலில் ஆண் சடலம் மீட்பு