- பறவைக் காய்ச்சல் பரவியது
- கேரளா
- தமிழ்நாடு எல்லை
- சென்னை
- பொது சுகாதார துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பறவை
- வெடித்தபோது
- ஆலப்புழை
- கோட்டயம்
சென்னை: கேரளத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழி, வாத்து, காடைகள் அதிகளவில் இறந்தது. இதையறிந்த கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இறந்த பறவைகளின் ரத்த மாதிரியை சேகரித்து புனே வில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பினர். அதில், உயிரிழந்த பற வைகளுக்கு, ‘எச்1 என்1’ பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட் டுள்ளது. இதையடுத்து, அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக – கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிர படுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 1,000க்கும்மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணை கள் உள்ளன. இந்த பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தமிழக – கேரள எல்லையோர மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி , கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . சபரிமலை கோயிலுக்கு அதிக அளவில் தமிழக பத்தர்கள் சென்று திரும்புவதால் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனை அணுகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோழிப்பண்ணைகள், ஈரச் சந்தைகள், பறவைகள் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பறவைகள் தங்கும் இடங்கள் கண் காணிக்கப்படுகின்றன. கால்நடை மருத்துவர்கள் மாதிரிகளைதொடர்ந்து சேகரித்து ஆய்வகங்களுக்கு அனுப்புகின்றனர். நிலைமை கட்டுக் குள் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
