×

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

சத்தியமங்கலம், டிச. 25: எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் புஞ்சைபுளியம்பட்டியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஸ்நிலையம் முன்பு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் சதீஷ், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் யூனியன் சேர்மன் பழனிச்சாமி, நிர்வாகி காரப்பாடி ராமசாமி, ஒன்றிய விவசாய அணி சோமசுந்தரராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பவானிசாகரில் பேரூர் செயலாளர் செல்வம் ,எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவி தலைமையில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூர் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Tags : MGR ,Sathyamangalam ,AIADMK ,Punjaipuliyampatti ,Bhavanisagar ,MLA Bannari ,
× RELATED கெஞ்சனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்கம்