சென்னை : தோனியை என்னுடன் ஒப்பிட முடியாது; தோனி பெரிய வழிகாட்டியாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இளம் தலைமுறையினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் VibeWithMKS வீடியோ வெளியானது. விளையாட்டு துறையினரிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கிரிக்கெட்டில் கபில் தேவ், தோனியை பிடிக்கும். நான் இப்போது வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன். கலைஞர் கிரிக்கெட் விளையாட நான் பந்து வீசியிருக்கிறேன். நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர்; கிரிக்கெட்டில் பைத்தியமாக இருந்திருக்கிறேன். பள்ளி புத்தகங்களை வைத்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். தற்போது வாய்ப்பு கிடைத்தால் கூட மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன்.
சினிமா பிரபலங்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டியில் நான் பங்கேற்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். கிரிக்கெட் வீரர் தோனியின் தலைமைப் பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். தோனி தற்போதும் பல பேருக்கு பெரிய வழிகாட்டியாக இருக்கிறார். சிரித்த முகத்துடன் அமைதியாக டென்ஷன் இல்லாமல் தோனி கேப்டன்ஷிப் செய்வார். Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு! தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன். Next Level Focus! இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட Future Legacy-யை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
