- முதல் அமைச்சர்
- மு கே. ஸ்டாலின்
- சென்னை
- ஹனிபா
- மு. கே. ஸ்டாலின்
- கே
- ஸ்டாலின்
- எல்.எம். கே. ஸ்டாலின்
- திமுக்
சென்னை: தேனாக பாடல் பாடும் ஹனிபாவுக்கு அந்தப் பெயர் பொருத்தமானது என்றார் கலைஞர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இசை முரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு நினைவு நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; திமுகவின் வளர்ச்சிக்கு நாகூர் ஹனிபாவின் குரல் துணை நின்றது. ஹனிபாவின் பாடலை கேட்டால் உணர்ச்சி பொங்காமல் ஒரு தமிழராலும் இருக்க முடியாது. நாகூர் ஹனிபா தனது குரலால் கோடிக்கணக்கான மக்களை வசப்படுத்தினார்.
தேனாக பாடல் பாடும் ஹனிபாவுக்கு அந்தப் பெயர் பொருத்தமானது என்றார் கலைஞர். திராவிட இயக்கத்தில் பங்கேற்று கலையையும், கொள்கையையும் வளர்த்தார் ஹனிபா. நகமும் சதையும் போன்றவர்கள் கலைஞரும் ஹனிபாவும். அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்டவர் நாகூர் ஹனிபா. மக்கள் பாடகராக வலம் வந்தவர் நாகூர் ஹனிபா. நாகூர் ஹனிபாவின் அரசியல் நுழைவுக்கு அடித்தளம் அமைத்தது திருவாரூர். 1949ல் திமுக தொடங்கப்பட்டபோது தொடக்க விழாவிலும் பாடியவர் நாகூர் ஹனிபா. நாகூர் ஹனிபாவின் போராட்ட வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்
கொண்ட கொள்கைக்காக சிறைக்குச் செல்லவும் தயங்காதவர்தான் நாகூர் ஹனிபா. 16 வயதில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் கருப்புக் கொடி காட்டி கைதானவர் நாகூர் ஹனிபா. உடலால் நாகூர் ஹனிபா மறைந்தாலும் அவரது குரல் நம் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. கலைஞர் தமது ஆட்சியில் நாகூர் ஹனிபாவை மேலவை உறுப்பினர், வக்ஃபு வாரிய தலைவராக்கி அழகு பார்த்தார். திமுகவுக்காக பல போராட்டங்களில் பங்கேற்று பத்து முறைக்கும் மேல் சிறை சென்றவர் ஹனிபா. திமுகவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சொத்து நாகூர் ஹனிபா என்று கூறினார்.
