×

நெல்லையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை.. 7 மாதங்களில் தீர்ப்பு!

நெல்லை: பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு, தூக்கு தண்டனை வழங்கி நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளி ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த கொடூர தந்தையே தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் அந்தச் சிறுமி 7 மாத கர்ப்பமானார். இந்த அதிர்ச்சித் தகவல் வெளியே தெரிந்ததையடுத்து, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 7 மாதங்களாக நடந்து வந்த நிலையில், வழக்கு முழுவதும் விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதில், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவரது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.மேலும் குற்றவாளிக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Nellai ,Nellai District POCSO Court ,Nanguneri ,Tirunelveli district ,
× RELATED 2024-25ல் மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம்...