×

வெப்பிலி விற்பனை கூடத்தில் ரூ.23 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

ஈரோடு, டிச.24: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.23 ஆயிரத்துக்கு நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பங்கேற்க வெப்பிலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 981 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில், ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.46.50க்கும், அதிகபட்ச விலையாக ரூ.48.20க்கும் சராசரி விலையாக ரூ.48.00க்கும் ஏலம் போனது. மொத்தம் 495 கிலோ எடையிலான தேங்காய்கள் விற்பனையாகின. இவற்றின் விற்பனை மதிப்பு ரூ.23 ஆயிரத்து 748 ஆகும் என விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Webbili ,Erode ,Chennimalai ,Erode district ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது