×

திமுக கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது : அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்

புதுக்கோட்டை : ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அதிமுகவை ஒன்றிணைக்க தமிழ்நாடு வந்துள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்ப நிலை பியூஷ் கோயலுக்கு தெரியாது. பியூஷ் கோயல் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது. அதிமுகவால் மெகா கூட்டணி அமைக்க முடியாது; திமுக கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது. சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 5 ஆண்டுகால சாதனைகள் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று கரும். பொங்கலுக்கு ரூ.5000 கொடுக்கச் சொல்கிறார் பழனிசாமி; அவரது ஆட்சியில் ரூ.5000 கொடுத்தாரா?.ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ், தினகரனை சேர்ப்பாரா?,”இவ்வாறு தெரிவித்தார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ்கோயல் சென்னை வந்தார். இதையடுத்து சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜவின் மையக்குழு கூட்டத்தில் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags : DMK ,Minister ,Raghupathi ,Pudukottai ,Union Minister ,Piyush Goyal ,Tamil Nadu ,AIADMK ,
× RELATED பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்...