×

மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 13ம் தேதி மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் இமாலய உச்சத்தை தொட்டது. இந்நிலையில், 15ம் தேதி ‘அந்தர்பல்டி’ அடித்து விலை குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.165-ம், பவுனுக்கு ரூ.1,320-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 350-க்கும், ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. தொடர்ந்து கடந்த 16ம் தேதி தங்கம் விலை குறைந்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்து 800க்கு விற்பனையானது.

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400-க்கும், ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.12, 480-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.231-க்கும் விற்பனையாகிறது.

Tags : Chennai ,
× RELATED கனிமொழி எம்பி தலைமையில் திமுகவின்...