டெல்லி: டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக காற்றின் தரம் மிக மிக மோசமான நிலையில் உள்ளது. ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொட்டும் பனியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். அயோத்தியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ள நிலையில், பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
