திருச்சி, டிச.20: திருச்சி பொன்மலைப்பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை (56). இவர் ரங்கம் அம்மா மண்ட பம் பகுதியில் இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டிச.18ம் தேதி அவ்வழியாக வந்த நபர் செல்லதுரையின் செல்போனை இரவல் வாங்கி பேசுவதுபோல் நடித்து பறித்து சென்றார். இதுகுறித்து புகாரின் பேரில் ரங்கம் போலீசார் வழக்கு பதிந்து ரங்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சிவா (20) என்பவரை கைது செய்தனர்.இதேபோன்று திருச்சி மணிகண்டம் ஆலம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (24).
இவர் டிச. 14ம் தேதி கோரையாறு பாலம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றனர். மற்றும் பிராட்டியூர் பகுதியை சேர்ந்த சரவணன் (51) என்பரிடம் பிரா ட்டியூர் காவேரிநகர் பகுதியில் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் எடைமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த தவசி (23) என்பவரை கைது செய்தனர். கருமண்டபம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்த 2 செல்போனை பறிமுதல் செய்தனர்.
