×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது மூத்த தம்பதியர்கள் 27 பேருக்கு சிறப்பு சேவை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்

பெரம்பலூர்,டிச.16: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 70 வயது பூர்த்தி அடைந்த 27 மூத்த தம்பதியினருக்கு வேட்டி, சேலை, சட்டை, மாலை மற்றும் மங்களப் பொருட்களை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயிலில்நேற்று (15ம்தேதி) திங்கட் கிழமை காலை, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 70 வயது பூர்த்தி அடைந்த 27 மூத்த தம்பதியினருக்கு தலா ரூ.2,500 மதிப்பிலான வேட்டி, சேலை, சட்டை, மாலை மற்றும் மங்கள பொருட்கள் வழங்கும் விழா பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், இந்து சமய அற நிலையத்துறையின் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கலந்து கொண்டு 70 வயது பூர்த்தி அடைந்த 27 மூத்த தம்பதியினருக்கு தலா ரூ.2,500 மதிப்பிலான வேட்டி, சேலை, சட்டை, மாலை மற்றும் மங்கள பொருட்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, 2025 -2026 ஆம் நிதி ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள திருக் கோயில்களில் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக் கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்.\” என அறிவிக் கப்பட்டது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயது பூர்த்தியடைந்த 27 தம்பதியினருக்கு தலா ரூ.2,500 மதிப்பிலான வேஷ்டி, சட்டை, சேலை, மாலை மற்றும் மங்களப் பொருட்களை தமிழ்நாடுஅரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் ஞானசேகரன், திருச்சி உதவி ஆணையர் லட்சுமணன், பெரம்பலூர் உதவி ஆணையர் உமா, சிறுவாச்சூர் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, திமுக மாநில நிர்வாகிகள் துரைசாமி, பரமேஸ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் வல்லபன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மகாதேவி, ஹரிபாஸ்கர், திருச்சி சர்வதேச விமானநிலைய ஆலோசனை குழு உறுப்பினர் டி.ஆர். சிவசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,S.C. Sivashankar ,Hindu Religious and Endowments Department ,Perambalur ,Siruvachur ,Tamil Nadu Transport and Electricity ,S.C. Sivashankar… ,
× RELATED தேனூர் கிராமத்தில் சாலையை சீரமைத்து தர கலெக்டரிடம் கோரிக்கை