×

விதைப்புக்குமுன் விதைநேர்த்தி அவசியம்; விவசாயிகள், வணிகர்கள் அலுவலர்களுக்கு முத்தரப்பு பயிற்சி

பெரம்பலூர், டிச. 11: பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஓர் அங்கமான விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் (WDRA) பதிவு செய்யப்பட்ட கிட்டங்கிகளில், வேளாண் விளை பொருட்களை இருப்பு வைத்து, வங்கிமூலம் கடன்பெறுவது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் செயல்படும் CCRL நிறுவனத்தின் மண்டல மேலாளர் வீரப்பன் என்பவரால் தெரிவிக்கப்பட்டு, பெரம்பலூர் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) தெய்வீகன் தலைமையில் முத்தரப்பு பயிற்சி நடைபெற்றது. பெரம்பலூர் விற்பனைக் குழு செயலாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

பயிற்சியில் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட செயல்பாடுகள் குறித்தும், வேளாண் வணிகத்துறையின் திட்டங்கள் குறித்தும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வாயிலாக விவசாயிகள் தங்களது வேளாண் விளை பொருட்களான மக்காச்சோளம், பருத்தி மற்றும் அனைத்து வித வேளாண் விளை பொருட்களையும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்று பயன் பெறுமாறு எடுத்துரைக்கப் பட்டது.

Tags : Perambalur ,Sales Committee ,Perambalur District Agricultural Sales and Agribusiness Department ,Warehousing Development and Regulatory Authority ,WDRA ,
× RELATED தா.பழூர் சுற்றியுள்ள பகுதிகளில்...