×

வீட்டில் சூனியம் வைத்ததாக புகார் 2 பேர் மீது வழக்கு பதிவு

கடலூர், டிச. 11: கடலூர் அருகே கே.புதூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் பாபு(40). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, அவரது வீடு மற்றும் நர்சரி கார்டனில் சூனியம் வைத்தது போன்று பூஜை பொருட்கள் இருந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேர் மீது சந்தேகம் உள்ளது என கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் பாபு புகார் அளித்தார். அதன்பேரில், ஆறுமுகம் மற்றும் வாசன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cuddalore ,Babu ,Sivalingam ,K. Puthur Mariamman Koil Street ,Chennai ,
× RELATED சமுதாய சீர்திருத்த சிந்தனைகளின்படி...