- திருப்பரங்குந்தரம்
- தீபம்
- நயினார் நாகேந்திரன்
- மதுரை
- திருப்பரங்குன்ராம் மலை
- Icourt
- மதுரைக்கோயில்
- திருப்பரங்குந்தரம் மலை
- பாஜக
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக போராட்டம் நடத்திய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 2 குழுவாக பிரித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
