பெரியகுளம்: நீர்ப்பிடிப்பில் கனமழையால், கும்பக்கரை அருவியில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல், வட்டக்கானல் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் பெய்து வரும் கனமழையால், அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அவ்வப்போது தடை விதிக்கப்படுகிறது.
கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை
