கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூங்கா ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

ஊட்டி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூங்கா ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும். 5 ஆண்டுகள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம்  செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தோட்டக்கலை பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 9வது நாளாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: