இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக தற்போது யாரும் பார்க்கவில்லை; வளர்ந்த நாடாக தான் பார்க்கின்றனர்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: காலநிலை மாற்றம், நாடுகளுக்கு இடையிலான போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் எதிர்பார்க்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழக என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள் மத்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். உலகில் உள்ள அனைவரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு பெருமைக்குரியது. இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக உலகம் பார்க்கலாம், வளர்ந்த நாடாகவே பார்க்கின்றனர். உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இடத்தில் இந்தியா உள்ளது.

உலக நாடுகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக உள்ளது.  ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் மூலம் மட்டுமே உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஜி.டி.பி.யில் 85 சதவீதம்  வருமானம் வருகிறது. அப்படிப்பட்ட ஒரு மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது என கூறினார். ஒட்டுமொத்த உலகிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள சூழலில் இந்தியா வளர்ச்சி பாதையில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பெரிய அளவில் கனவு காணுங்கள், எதை செய்தாலும் அதில் சிறந்து விளங்குங்கள், அப்படி தொடர்ந்து பயணம் செய்தால் யாராலும் உங்களை தடுக்க முடியாது எனவும் ஆளுநர் கூறினார்.

Related Stories: