ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்; அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். பாஜக-வின் ஆதரவு குறித்து நானும் பாஜக தலைமையும் விரைவில் அறிவிப்போம். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே விருப்பம். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பமாக இன்று வரை உள்ளது.

தேர்தல் பணிமனை பெயர் மாற்றம் குறித்து அவர்களிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். நான் இரட்டை இலை சின்னத்திற்கு கேட்டுவந்தால் கையொப்பமிடுவேன். எங்களை பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அங்கம் வகிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன். கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளேன். ஒன்றிய பட்ஜெட் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு ஒதுக்குகின்ற நிதியை தமிழ்நாடு அரசு எடுத்துக் கொண்டு நாட்டின் சுபிட்சத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். பட்ஜெட்டின் விரிவான அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: