மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மும்பையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ரயில் போக்குவரத்தில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுருக்கும் செய்தியில்  மும்பை, நவிமும்பை, தானே உள்ளிட்ட இடங்களில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவித்திருக்கிறது. கடலோரப்பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படும் என்றும் கூறியுள்ளது.இந்நிலையில் மும்பை மரைன் டிரைவ் பகுதியில் அலைகள் 10 அடிக்கு எழும்பியதால் பீதி ஏற்பட்டது.

தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிராவில் இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் தீவிரம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மகாரஷ்டிராவில் 68 சென்றுமீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது ஜூலை மாததில் பெய்யும் மழையை விட 27 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவித்துத்திருக்கிறது.

Related Stories: