அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை..: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனைக்கு ஆய்வு மேற்கொண்டார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனை வளாகத்தில் காலாவதியான கிணற்றில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. காலாவதியான மருந்துகள் அல்லது பேப்பர்கள் அகற்றப்பட வேண்டும். கிணற்றில் மருத்துவ கழிவுகள் கொட்டியது தவறு தான். இந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிய இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டேன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் ஒரு சில இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மருத்துவ கழிவுகளை அகற்றும் முறைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்தலாம். மாஸ்க் அணிவதில் இருந்து எந்த விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை. மேலும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.

Related Stories: