உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், ஊரக உள்ளாட்சி தேர்தல்  குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.  திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று திருக்கழுக்குன்றத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் ஜி.டி.யுவராஜ் முன்னிலை வகித்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரின் வெற்றிக்காக கட்சி நிர்வாகிகள்  பாடுபட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

இதில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன், 8வது வார்டு மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் ஆர்.கே.ரமேஷ், நிர்வாகிகள் தனசேகரன், பூபதி, சுரேஷ், அம்சவள்ளி, செல்வக்குமார், ஞானபிரகாசம், ஜாகீர்உசேன், அரிதினேஷ், சுகுமாரன், ரத்தினவேல், செங்குட்டுவன், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>