×

என்னை போலவே ரசிகர்களும் முன்னேற வேண்டும்: அஜித் குமார்

சென்னை: தமிழில் திரைக்கு வந்த ‘குட்​ பேட் அக்​லி’ என்ற படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கத்​தில் நடிக்கும் அஜித் குமார், இம்மாத இறுதியில் அதுபற்றி அறி​விப்பு வெளியிடுகிறார். இந்நிலையில் அவர் கார் பந்​த​யத்​தி​ல் கவனம் செலுத்தி வரு​கிறார். கடந்த ஆண்​டு அபுதாபி, பார்​சிலோ​னா, மலேசியா உள்பட பல நாடு​களில் நடந்த கார் பந்தய போட்​டிகளில் தனது அணி​யினருடன் பங்கேற்ற அவர், தற்போது 24 ஹெச் சீரிஸ்-மத்​திய கிழக்கு டிராபிக்​கான பந்​த​யத்​தில் பங்கேற்றுள்ளார்.

அப்போது அஜித்​ கு​மார் பேசியுள்ள ஒரு வீடியோ இணை​யதளங்களில் வைரலாகி வரு​கிறது. அதில் அவர், ‘நான் வாழ்க்​கை​யில் சிறப்​பாக இருக்க வேண்​டும் என்று எப்​படி ரசிகர்கள் விரும்​பு​கிறார்களோ, அதுபோல் அவர்​களும் தங்​கள்​ வாழ்க்​கை​யில்​ முன்​னேற வேண்​டும்​ என்​று நான் பெரிதும் விரும்​பு​கிறேன். அனை​வருக்​கும்​ மிகச்சிறந்த மற்​றும்​ அழகான வாழ்க்​கை அமைய ​வாழ்​த்​துகிறேன்​‘ என்​று தெரிவித்​துள்​ளார்​.

Tags : Ajith Kumar ,Chennai ,Adhik Ravichandran ,Abu Dhabi ,Barcelona ,Malaysia ,24H Series-Middle East Trophy ,Ajith ,
× RELATED திடீரென்று கிளாமருக்கு மாறிய ரஜிஷா விஜயன்