சென்னை: ரவி மோகன் நடித்த ‘கோமாளி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக, ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார். இதை தொடர்ந்து ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.
இந்த நிலையில், ‘நடிகராக மட்டும் இருப்பதை விரும்புகிறீர்களா? மீண்டும் படம் இயக்க விரும்பவில்லையா?’ என்று பிரதீப் ரங்கநாதனிடம் கேட்கப் பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘நான் தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். மீண்டும் படம் இயக்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது. அதற்காக ஒரு கதை தயாராக இருக்கிறது. கதையை பாதி வரை எழுதி முடித்துள்ளேன். மீதியுள்ள கதையையும் எழுதி முடித்துவிட்ட பிறகுதான், அப்படத்தை இயக்குவதை பற்றி யோசிக்க முடியும். இப்போது எந்த விஷயத்தையும் உறுதியாக சொல்ல முடியாது. இங்கு எல்லாவற்றையும் அந்தந்த சூழ்நிலைகள்தான் முடிவு செய்யும்’ என்று சொன்னார்.
