
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் வரலட்சுமி, கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். தொடந்து சினிமாவில் நடித்து வரும் அவரை, ராதிகா மகள் ரேயான் பேட்டி எடுத்தார். அதில் பல விஷயங்களை வரலட்சுமி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு பெண்களின் வாழ்க்கை திருமணத்துடனும், தாய்மையுடனும் இணைத்து பேசப்படுகிறது. நீ இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள தயாரா என்று பெண்களை யாருமே கேட்பதில்லை. இதுபற்றி உன் கருத்து என்ன?’ என்று ரேயான் கேட்டார்.
அதற்கு பதிலளித்த வரலட்சுமி, ‘குழந்தையை பெற்றெடுத்தால் மட்டும்தான் தாய்மை அடைய முடியும் என்று சொல்ல முடியாது. எனக்கு இப்போது குழந்தை பெற்றெடுக்கும் எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் இந்த எண்ணம் மாறலாம். ஏற்கனவே எனது சகோதரி, நண்பர்கள் மற்றும் நான் வளர்க்கும் நாய்க்கு அம்மாவாக இருக்கிறேன். இதில் இன்னொரு குழந்தையை என்னால் கவனித்துக்கொள்ள முடியாது. ஒரு பெண் குழந்தை பெற வேண்டாம் என்று முடிவு செய்தால், அதுவே சிறந்த குழந்தை வளர்ப்பு முடிவாக இருக்கும்’ என்றார்.

