×

ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கும் சிந்தியா லூர்டே

சென்னை: சிந்தியா புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் சிந்தியா லூர்டே தயாரித்து நடித்துள்ள படம், ‘அனலி’. தினேஷ் தீனா எழுதி இயக்க, ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.சி என்ற தீபன் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். தாமு அரங்கம் அமைக்க, ஜெகன் சக்ரவர்த்தி எடிட்டிங் செய்துள்ளார்.

கபிலன், அ.பா.ராஜா, யாசின் ஷெரீப் பாடல்கள் எழுதியுள்ளனர். விக்னேஷ் நடனப் பயிற்சி அளித்துள்ளார். படம் குறித்து சிந்தியா லூர்டே கூறியதாவது: ‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ ஆகிய படங்களை தொடர்ந்து நான் தயாரித்துள்ள ‘அனலி’ படத்தில், முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்துள்ளேன். பி.வாசு மகன் சக்தி வாசு,

கபீர் துஹான் சிங் வில்லன்களாகவும், முக்கிய வேடத்தில் அபிஷேக், இளங்கோ குமரவேல், இனியா, ஜெயசூர்யா, மேத்யூ வர்கீஸ், அசோக் பாண்டியன், ஜென்சன் திவாகர், வினோத் சாகர், பேபி ஷிமாலி, சிவா நடித்துள்ளனர். 10 ஆயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில் போடப்பட்ட அரங்கில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். வரும் ஜனவரி 2ம் தேதி ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

Tags : Cynthia Lourdes ,Chennai ,Cynthia Production House ,Dinesh Deena ,Ramalingam ,D.C. ,Deepan Chakravarthy ,Super ,Subbarayan ,Jagan Chakravarthy ,Kabilan ,A.P.Raja ,Yasin Sharif ,Vignesh ,
× RELATED ரூ.1,100 கோடி வசூலித்த ‘துரந்தர்’