×

கிரைம் திரில்லர் புகார்

சென்னை: ஸ்ரீ மதுராஜா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘புகார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. தயாரிப்பாளர் ஸ்ரீமதுராஜா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் ஏ.சி.மணிகண்டன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு ‘ரூட்’ என்கிற படத்தை இயக்கியவர். கதாநாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக ராஜ்கிரண் மற்றும் இன்னொரு கதாநாயகியாக ஜனுஷ்கா நடிக்கின்றனர்.

வில்லனாக மணி செல்வம் நடிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கிரைம் திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகிறது. இன்றைய சூழலில் காதலால் பல கொலைகள் அரங்கேறுகின்றன. அந்த குடும்பங்கள் சந்திக்கும் வலி, அதன்பிறகு அந்த குடும்பங்களின் நிலைமை என்ன ஆகிறது என்பது பற்றியும் காதலால் ஏற்படும் கொலைகளை தடுப்பதற்கு வழி சொல்லும் விதமாகவும் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Sri Madhuraja Productions ,Sri Madhuraja ,A.C. Manikandan ,Rashmita ,Rajkiran ,Janushka ,Mani Selvam ,
× RELATED தமிழுக்கு வரும் ஆதி சாய்குமார்