×

‘அவதார்’ 4ம் பாகம் உருவாகுமா?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்’ படத்தின் முதல் பாகம், கடந்த 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்தது. வசூலில் சாதனை படைத்த இப்படம், 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு ‘அவதார்’ படத்தின் 2ம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ வெளியாகி அதிக வசூல் செய்தது. தற்போது ‘அவதார்’ படத்தின் 3ம் பாகமான ‘அவதார்: ஃபயர் அன்ட் ஆஷ்’ படம், உலகம் முழுவதும் 3,000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் 800 கோடி ரூபாய் வசூலானது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜேம்ஸ் கேமரூனிடம், ‘அவதார்’ படத்தின் 4ம் பாகம் எப்போது ரிலீசாகும் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘பிரசவம் முடிந்த பெண்ணிடம், அடுத்த குழந்தை எப்போது என்று யாராவது கேட்பார்களா? இப்போதுதான் 3ம் பாகத்தை ரிலீஸ் செய்திருக்கிறேன். அதற்குள் 4ம் பாகம் குறித்த கேள்விகளை கேட்காதீர்கள்’ என்றார். இந்நிலையில், ‘அவதார்’ படம் 5 பாகங்கள் கொண்டதாக இருக்கும் என்றும், அதில் 4ம் பாகத்தில் ஒரு பகுதி ஏற்கனவே தயாராகி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : James Cameron ,
× RELATED ஏஐ டெக்னாலஜி ஆதிக்கத்தால் இசை அழிந்துவிடாது: சாம் சி.எஸ் நம்பிக்கை