×

16 வயது மகளிடம் கேட்க கூடாத கேள்வி கேட்ட நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை: இந்தி படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்து வருபவர் நடிகை கௌதமி கபூர். பிரபல டிவி சீரியல் நடிகரான ராம் கபூரின் காதல் மனைவி. ராம் கபூர், கௌதமிக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் அளித்த பேட்டியில் கௌதமி கபூர் பேசியதற்கு தான் சமூக வலைதளவாசிகள் அவரை கண்டபடி விமர்சித்திருக்கிறார்கள். அதில் கௌதமி கபூர் கூறியதாவது: என் மகளின் 16வது பிறந்தநாளுக்கு அவருக்கு செக்ஸ் பொம்மை அல்லது வைப்ரேட்டரை பரிசாக அளிக்க நினைத்தேன்.

இது குறித்து என் மகளிடம் தெரிவித்தபோது அம்மா, என்ன பேசுறீங்க என்றார். இது போன்ற பரிசுகள் வேண்டுமா என்று எத்தனை அம்மாக்கள் தங்கள் மகளிடம் கேட்பார்கள் என யோசித்துப் பார் என்றேன். என் அம்மா எனக்கு செய்யாததை என் மகளுக்கு நான் செய்ய விரும்புகிறேன். அவள் அனைத்தையும் எக்ஸ்பீரியன்ஸ் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். பல பெண்கள் இந்த சுகங்களை எல்லாம் அனுபவிக்காமலேயே இருந்துவிடுகிறார்கள். அப்படி ஏன் இருக்க வேண்டும்? என் மகளுக்கு தற்போது 19 வயதாகிறது.

நான் அப்படி யோசித்ததை நினைத்துப் பார்த்து என் மகள் என்னை பாராட்டினார் என்றார். கௌதமி கபூர் தன் மகளிடம் வெளிப்படையாக பேசியது பிடிக்காமல் பலரும் அவரை திட்டித் தீர்த்துவிட்டார்கள். அது குறித்து கௌதமி தற்போது மற்றொரு பேட்டியில் கூறும்போது, ‘‘எனக்கே தெரியாத காரணத்திற்காக நான் சர்ச்சையில் சிக்கியிருக்கிறேன். எல்லா அம்மாவும் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று நான் பொதுவாக சொல்லவில்லையே. என் மகளை பற்றி நான் பேசினேன். என் மகளிடம் நான் எதையும் மறைப்பது இல்லை.

அது குறித்து பேசியதற்காக நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்?. எங்கள் பிள்ளைகளிடம் நானும், ராமும் எப்பொழுதுமே வெளிப்படையாக தான் பேசுவோம். அது சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அதை வைத்து நான் அவர்களை ஜட்ஜ் பண்ண மாட்டேன். என் இன்ஸ்டாகிராமில் வந்திருக்கும் கமெண்ட்டுகளை வாய்விட்டு சொல்ல முடியாது.

அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. அதை எல்லாம் பார்த்து நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். இரவில் தூங்க முடியாமல் தவித்தேன். ஒரு பெண்ணை பற்றி இப்படி மோசமாக பேசுவார்கள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை. கமெண்ட்டுகளை எல்லாம் பார்த்து ஒரு மாதம் நான் இன்ஸ்ட்கிராம் பக்கமே போகவில்லை’’ என்றார்.

Tags : Mumbai ,Gautami Kapoor ,Ram Kapoor ,Gautami ,
× RELATED தமிழுக்கு வரும் ஆதி சாய்குமார்