×

விமர்சனம்: சுப்பன்

மதுரையிலுள்ள மிகப்பெரிய ரவுடியின் சிஷ்யன் ஆனந்த் முருகன், திடீரென்று குருவை மிஞ்சிய சிஷ்யனாகிறார். நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த கஜராஜ், சாய் லட்சுமி தம்பதியின் பாலஹாசன், தனது தங்கை காயத்ரி ரெமாவுக்கு நடந்த கொடுமையைக் கண்டு கொதிக்கிறார். காயத்ரி ரெமா உள்பட பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த ஆனந்த் முருகனின் தம்பி யாசர், போலீஸ் துணையுடன் அராஜக செயல்களில் ஈடுபடுகிறார். அவரைக் கொல்ல தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிடும் பாலஹாசன், இறுதியில் என்ன ஆனார்? காயத்ரி ரெமாவுக்கு நீதி கிடைத்ததா என்பது மீதி கதை.

தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தை ரவுடியிசம், கந்துவட்டி, மாஃபியா பின்னணியில் சொல்லியிருக்கிறார், இயக்குனர் குகநேசன் சோனைமுத்து. மிரட்டல் ரவுடியாக ஆனந்த் முருகன், தனது தங்கைக்காக உருகும் பாலஹாசன், பாதிக்கப்பட்ட பெண்ணாக காயத்ரி ரெமா மற்றும் தேவா, யாசர், சாருமிஷா, கஜராஜ், சரவண சக்தி, ஸ்வாதி எஸ்.பிள்ளை, ஹலோ கந்தசாமி, விஜே ஆண்ட்ரூஸ் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் ஒரு பாடல் கவனத்தை ஈர்க்கிறது. ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்க்கிறது. எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள குகநேசன் சோனைமுத்து,
பெண்கள் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்ற மெசஜை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். எல்லா போலீசும் ரவுடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக காட்டுவது நெருடுகிறது. யாசரின் மேனரிசங்களை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

Tags : Anand Murugan ,Madurai ,Balahasan ,Gajaraj ,Sai Lakshmi ,Gayatri Rema ,Yasar ,
× RELATED உடலழகை எடுப்பாக காட்ட வற்புறுத்தினார்கள்: ராதிகா ஆப்தே கடும் தாக்கு