- நாகேஷ்
- சென்னை
- பிஜேஷ் நாகேஷ்
- துல்கர் சல்மான்
- ராணா டகுபதி
- Samuthirakani
- பாக்யா போர்ஸ்
- கஜேஷ் நாகேஷ்
- ஆனந்த் பாபு
- எஸ். அருள் பிரகாசம்
- ஷாஜிதா
- அன்புச்செல்வி
- எஸ். அருள்
சென்னை: துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்ய போர்ஸ் நடிப்பில் வெளியான ‘காந்தா’ என்ற படத்தில் நடித் தவர், பிஜேஷ் நாகேஷ். அவரது சகோதரர், கஜேஷ் நாகேஷ். இவர்கள் இருவரும் பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும், நடிகரு மான ஆனந்த் பாபுவின் மகன்கள். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான ‘மனசும் மனசும் சேர்ந்தாச்சு’ என்ற படத்தில், கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.
எஸ்.அருள் பிரகாசம் எழுதி இயக்கியுள்ளார். ஷாஜிதா, அன்புச்செல்வி, எஸ்.அருள் பிரகாசம், கராத்தே ராஜா, சத்யன் நடித்திருக்கின்றனர். திருமலை கோவிந்தன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.நந்தகோபால் இசை அமைக்க, கிரேசன் ஜோஸ்.எப் வசனம் எழுதியிருக்கிறார். மாரி வீரராகவன் நடனப் பயிற்சி அளித்துள்ளார். வாலி லோகு சண்டைக் காட்சி அமைக்க, எஸ்ஏஎப் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.அருள் பிரகாசம் தயாரித் துள்ளார்.
